கண்ணீர் அஞ்சலிகள் திரு .தம்பிப்பிள்ளை சோதிலிங்கம் பெயருக்கேற்ற பெரு வெளிச்சமான பேரன்புக்கு சொந்தக்காரன் நீர் யாருக்கும் மனம் நோகாமல் பொது கருமம் ஆற்றும் வல்லவனே எந்தை முருகன் சிந்தை மகிழ கந்தன் பணிஅனைத்தும் களிப்புடன் செய்யும் அவன் அருள் தொண்டனே தேரேறி வீதிவரும் சிவன் பாலன் திருநாளில் நேராக இரதம் பவனி வர சிறப்புடனே தடை போட்டு சரியான பாதைதன்னில் இருப்பிடம் சேர்க்கும் சாமர்த்தியமான சண்முகனின் தேரோட்டி அல்லவா நீர் இனம் ,மதம் இரண்டையும் இருகண்கள் போல் இறுதிவரை நேசித்த எம் மண்ணின் மைந்தனே எம்மைவிட்டு பிரியும் வயதா உமக்கு தேவை என்றா அழைத்தான் சண்முகனும் தமக்கு இந்த இடர்காலம் மாறவேண்டும் எண்ணுகின்ற வேளையில் இடிபோல செய்திதந்து இறைவனடி சேர்ந்துவிடடீர் படியேறி கந்தன் அடித்தொழும் வேளையிலே பாசமுள்ள சோதி நிந்தன் நினைவலைதான் பழகிய அனைவரின் மனமதில் நிழலாடும் ஓம் சாந்தி
Tenker på gode gamle dager Sothy❤️ Hvil i fred