10ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் தம்பிப்பிள்ளை சிவபாலன்
                    
                            
                வயது 60
            
                                    
            
        
            
                அமரர் தம்பிப்பிள்ளை சிவபாலன்
            
            
                                    1951 -
                                2011
            
            
                புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை சிவபாலன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
அந்த இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலைய செய்யுதப்பா
நேற்றுப் போல் இருக்கிறது நெஞ்சகலா அந்நினைவு
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
அண்ணா!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது நம் நினைவுகள்...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!     
                        தகவல்:
                        குடும்பத்தினர்