5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிப்பிள்ளை செல்லாச்சி
வயது 96
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், , கனடா Toronto வை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை செல்லாச்சி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
அம்மா நாம் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!
Our deepest sympathies. Her soul to rest in peace