10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:28/03/2026
யாழ். அரியாலை ஆனந்தவடலி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை இராமநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பத்து ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த ஐயா
வேவளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute