யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு, கனடா Toronto மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி சபிண்டீகரண வீட்டுக்கிருத்திய கிரியைகள் 24-08-2024 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் அவரது இல்லத்திலும் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.30 மணியளவில் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் காஞ்சி மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுடன் மதியபோசன நிகழ்வு நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன வைபவத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 20,2ம் ஒழுங்கை,
சின்னப்புதுக்குளம்,
வவுனியா.