

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் ஸ்ரேஷன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து திருஞானசம்பந்தர் அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று ஈசன் சேவடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும், சேனாதிராஜா செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜினி(சட்டத்தரணி), திருவரன்(Accountant People Leasing PLC), அகிலினி(Application Developer), யோகரூபன்(சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூமணி தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து துரைராஜா, தம்பையா கனகம்மா, பொன்மணி ஆறுமுகம் சிவசுப்ரமணியம் விமலாதேவி, தம்பிமுத்து பாக்கிய லீலாவதி, தம்பிமுத்து தர்மகுல ராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரவணமுத்து கதிர்காமத்தம்பி, சேனாதிராஜா செல்வநாயகம் செல்வநாயகம் சகுந்தலாதேவி, செல்லத்துரை செல்வரட்ணம், செல்வரட்ணம் சுகந்தமலர், சேனாதிராஜா முருகானந்தன், முருகானந்தன் மோகனமலர், சேனாதிராஜா வேல்முருகன், வேல்முருகன் இராஜ கன்னிகா, ஐயாத்துரை சிவநேசன், சிவநேசன் தங்கமலர், சேனாதிராஜா ராஜ்குமார், ராஜ்குமார் பியூலா, காலஞ்சென்ற இந்திராணி கதிர்காமத்தம்பி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.