யாழ். ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா தியாகராஜா அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று Melbourne இல் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பு பத்மாவதி தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,
காலஞ்சென்ற யோகசுந்தரா அவர்களின் அருமைக் கணவரும்,
தயாளன், சந்திரிக்கா, குணாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபோதினி, வசந்தன், சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜா, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி, சிவசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவநாதன், விவேகசுந்தரா, சத்தியநாதன், அம்பிகா, கருணாகரன், சுபாஷ்கரன், ஆனந்தி ஆகியோரின் அன்பு அத்தானும்,
ரோகிணி, காலஞ்சென்ற கிருஷ்ணதாஸ், தனலக்ஷ்மி, யோகநாதன், சுமதி பாலலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இளங்குமரன், தமயந்தி, சாரங்கன், லலிதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆதர்ஷ், அபிலாஷ், அக்ஷயா, விஷ்வா, சுவேதா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.