யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா சுப்பையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நெஞ்சம் நிறைந்திட்ட அன்பு அப்புவுக்கு எமது நினைவஞ்சலி
அப்பு அப்புவென நாம் அழைக்கும் அன்புத் தந்தையே
பொன்னுடல் பூவுலகைவிட்டு மறைந்து
ஆண்டு ஒன்று வந்தும் ஆறமுடியவில்லையே
அழுது வடித்த கண்ணீரும் காயவில்லையே
செம்மையுறும் வாழ்வினில் நாமுயரக்கண்டே
செய் பணிகள் யாவையும் சிறப்புடனே செய்தீர்
கடின உழைப்பதனை உயர்வாய் கொண்டு
கல்விதனில் மேன்மையுற்று விளங்கவைத்தீர்
அன்பால் அடக்கமான இனிய பண்புகளால்
எல்லோர் உள்ளம் தனில் இடம் பிடித்தீரே
மனைவி பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்
உடன்பிறப்புக்களென உயிராய் அன்பு கொண்டீர்
வசதியாய் வாழ்ந்திட தேசங்கள் பல இருந்தும்
பிறந்த மண்ணில் மடிந்திடவே ஆவல் கொண்டீர்
அம்மாவை விட்டு என்றும் பிரிந்திருந்ததில்லையே - அப்பு
உங்கள் முகம் காணாது தவியாய் தவிக்கிறார் அம்மா
பிள்ளைகள் எல்லாம் பறந்தோடி உங்கள் பக்கம் வந்தும்
உயிரற்ற உடல் மீது விழுந்து அழுதோமே
விண்ணோடு சென்று உயிர் கலந்திட்டாலும் - எங்கள்
கண்ணோடு நின்று என்றும் காட்சி தரவேண்டும் அப்பு!
நாளும் முகம் பார்த்து குரல் கேட்டு
மூடிய இதழின் புன்முறுவல் கண்டு மகிழ்ந்தோமே அன்று!
இன்று நிழற்படத்தின் முகம்பார்த்து அழுகின்றோம் அப்பு
இனிய நல் ஆத்மா, நாளும் பூக்கொண்டு தொழுதிட்ட
வயலூர் முத்துமாரியம்மன் பாதங்களைச்
சென்றடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி/ ஓம் சாந்தி/ஓம் சாந்தி
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்