யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கோட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராசதுரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா… ❤️
பத்து வருடங்கள் ஆகிவிட்டாலும்
உங்கள் நினைவுகள் மட்டும்
நேற்றைப் போலவே இருக்கிறது…
எங்கள் சிரிப்புக்குள் மறைந்திருக்கும்
அந்த சிறிய கவலையின் காரணம்
நீங்கள் இல்லாத வெற்றிடம்தான் அப்பா…
காலம் நகர்ந்தாலும்
“அப்பா” என்று அழைக்க
தேடிக்கொண்டே இருக்கிறது மனம்…
இன்று நாங்கள் பெரியவர்களாக இருந்தாலும்
என்றுமே உங்கள் குழந்தைகள் தான்…
எத்தனை பேரின் அன்பு கிடைத்தாலும்
உங்கள் தோளின் ஆறுதல் மட்டும்
எங்கும் கிடைக்கவில்லை அப்பா…
நீங்கள் இல்லாத இந்த வாழ்க்கையில்
ஒவ்வொரு சந்தோஷத்திலும்
கொஞ்சம் வலி கலந்தே இருக்கிறது…
சில இரவுகளில்
உங்களை நினைத்து அமைதியாக அழுகிறது மனம்…
“இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே அப்பா…”
என்று ஆயிரம் முறை கேட்கிறது உள்ளம்…
உங்கள் குரலும், சிரிப்பும், அன்பும்
எங்கள் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத பொக்கிஷம்…
நீங்கள் எங்களுடன் இல்லையென்றாலும்
ஒவ்வொரு அடியிலும்
நீங்கள்
கூடவே இருப்பதை உணர்கிறோம்…
நாங்கள் இன்னும் உங்களை
தேடிக்கொண்டே இருக்கிறோம் அப்பா… ❤️