Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 OCT 1932
இறப்பு 28 JAN 2017
அமரர் தம்பையா கிருஷ்ணபிள்ளை
வயது 84
அமரர் தம்பையா கிருஷ்ணபிள்ளை 1932 - 2017 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா கிருஷ்ணபிள்ளை அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எட்டு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில்
நிலையாய் நினைத்து நிற்கின்ற
உங்கள் நினைவுகளுடன் அப்பா...

பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும்
பாரில் இலக்கணமாய் விளங்கிய
எங்கள் தந்தையே!

உங்கள் முகம் கண்டு ஆண்டு
எட்டு ஆனதோ அப்பா...!
தந்தையே நீங்கள் சென்று எட்டாண்டு
ஆனாலும் என்றும் எம் நெஞ்சில்
நீங்காத நினைவாக இருப்பீர்கள்
பார்க்கும் இடமெல்லாம் உங்கள் உருவம் தெரிகிறதே!

எங்கள் நெஞ்சம் நேரில் பார்த்திடத் துடிக்கிறதே!
ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
 
ஆழிசூழ் உலகில் தந்தை உங்கள்
நினைவு மங்கிடுமோ?

நீங்கள் தந்த பாசத்தை இவ்வுலகில்
எமக்கினி யார் தருவார்?
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின்
ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம் அப்பா...

தகவல்: ராகுலன் கிருஷ்ணபிள்ளை