

யாழ். கோப்பாய் வடக்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சோமசுந்தரம் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
வசுமதி, கோமதி(நோர்வே), மதுமதி(ஆசிரியை), தனுஜா, நிறுஜா(அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
சரத் விஜயானந்தன்(ஜெயசக்தி ராண்ஸ்போட்), கணநாதன்(நோர்வே), கிருபாநந்தம்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சதீஸ்வாரன்(ஏஞ்சல் ஒப்நிக்கர்), தயாரூபன்(கல்லுடைக்கும் ஆலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், இராசமணி, விஸ்வலிங்கம், மனோன்மணி மற்றும் சொர்ணலக்சுமி, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற மனோகரன்(கனடா), மகேந்திரன்(லண்டன்), புஸ்பராணி, தவேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ரவீந்திரன், வதனி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதுசன், கரிசன், கர்சியா, கனோஜென், பவானுஜன், கரணி, ரிதூசன், பிரியகன், கவிஷானி, ஜஸ்விகா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன் காடு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolences .May his soul rest in peace