யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா முருகேசு அவர்களின் 100வது பிறந்தநாளும் 4ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
அன்பு நிறைந்த எங்கள் ஐயாவே!
ஆருயிர் தந்தையே!
கண்ணை இமை காப்பது போல்
எங்கள் அறுவரையும் காத்திரே!
எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும்
நல்ல பண்பாளரே!
எங்களுடன் உங்கள் மருமக்களையும்
பெற்ற பிள்ளைகள் போல் காத்திரே!
ஐயா, என்று எல்லோரும் சொல்லும்
சொல்லுக்கு இலக்கணமானீரே!
உங்கள் பேரப்பிள்ளைகளையும்
பேணி பெருவாழ்வு அளித்திரே!
கண்ணுக்கினிய நிறை பூட்டப்பிள்ளைகளையும்
கண்டு மகிழ்ந்திரே!
ஆண்டுகள் நூறு வரை எங்களுடன் வாழ்வீர்கள்
என்று எண்ணியிருந்தோம்!
ஆனால் அம்மா பிரிந்தவுடன் உற்றவளுடன்
உடன் உறையச் சென்றீரோ!
ஐயா உங்கள் நூறாவது அகவையினில் உங்கள் நினைவுகளுடன், உங்கள் ஆசியினை வேண்டி நிற்கின்றோம் உங்கள் நினைவாக உற்றார், உறவினர், செஞ்சோலை சிறார்களுடன் உங்கள் அகவையை நினைவு கூறுகின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைக, பூட்டப்பிள்ளைகள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.