Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 JUN 1958
மறைவு 11 MAR 2022
அமரர் தம்பையா அமிர்தலிங்கம்
வயது 63
அமரர் தம்பையா அமிர்தலிங்கம் 1958 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா அமிர்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலமரமாகி நிழல் தந்து எமை காத்திட்ட
எங்கள் குளவிளக்கே குணக் குன்றே
அன்பிற்கு அர்த்தம் தந்தீர்கள் - அப்பா
அன்புடன் எங்களைப் பார்த்தீர்கள்
ஆண்டு ஒன்று வந்தாலும் - அப்பா
ஆறாது உங்கள் பிரிவின் கவலை

இன்முகத்துடன் உற்றார் உறவினரை ஆதரித்தீர்கள்
ஈகையிலே சிறந்து விளங்கினீர்கள்
உத்தமராய் வாழ எங்களுக்கு வழிகாட்டினீர்கள்
என் கடன் பணி முடிந்ததென்றே நம்
கண்முன்னே அன்பான பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளை
விட்டு விலகி நெடுந்தூரம் நீங்கள் சென்று விட்டாலும்
எங்கள் மனக் கண்ணில் என்று நிறைந்திருப்பீர்கள்

உங்கள் பிரிவு சோகக்கதையானதே
இதை விதி என்பதா?
வினை என்பதா?கலி என்பதா?
வரமாக பாசமான அப்பாவை தந்த கடவுளின் சதி என்பதா? 
ஊழ்வினைப் பயன் என்பதா?
மறுபிறப்பு உண்டெனின்
மீண்டும் வர வரம் வேண்டுகிறோம்....

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 12 Mar, 2022