யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கு கரவெட்டி மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா திருவானந்தராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும், அழைப்பும்.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை கொழும்பு முகத்துவரக் கடலில் நடைபெற்று, 22-02-2023 புதன்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் பம்பலபிட்டி சனசமு கட்டிடத்தில் நடைபெறும். அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி!!!
Sorry to hear the sudden loss. Deepest sympathy to family Vijayan