கண்ணீர் அஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புத்தூர் ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா சுப்பிரமணியம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்பிலே மலர்ந்த முகம்
அமைதியாய் சிரித்த இதழ்கள்
கருணை நிறைந்த உள்ளம்
என்றென்றும் நீங்காத விருந்தோம்பல்
பாசமெனும் கயிற்றினால்
பார்ப்போரை கவர்ந்திழுத்தீர்கள்
இன்று பாரினில் நீங்கள் இன்றி
பரிதவித்து வாடுகின்றோம்
நீங்கள் இல்லை என்பதையே
உணர மறுக்கின்றது எம் இதயம்
இறைவன் மடியில் இளைப்பாற
விரைந்து சென்றதேனோ
கண்முன்னே அழியாத ஓவியமாய்
என்றென்றும் - எம் இதயங்களில்
வாழுகின்ற அகல் விளக்கே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது ஆவரங்கால் இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
ரஜீ திலா
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute