யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி இரத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பாக்கியம்(பிள்ளையார் விலாஸ் உரிமையாளார்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகாநந்தன் பரமரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
31ம் நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்,
நாம் உம்மை எப்படி மறப்போமம்மா!
தாங்காத வலியோடு தவிக்கின்றோமோ அம்மா!
பரணியில் உம்மை காண்பது எப்போ அம்மா!
உயிருக்கு உயிராய் இருந்த எங்கள் தாய்த் தெய்வமே
உங்கள் திருமுகம் காணமல் போனது தான் என்னவோ?
உங்கள் கருவில் எங்களை சுமந்து எங்களுக்கு
உயிர் கொடுத்த தாய் தெய்வமே!
கருனை வடிவமான எங்கள் தெய்வமே!
அன்றிலும் பேடும் போல இனை பிரியா எங்கள்
தெய்வத்தை இழந்து கலங்கி நிற்கின்றோம்!
எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தொடர்புகளுக்கு
- Contact Request Details