

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி மணிவாசகம்பிள்ளை அவர்கள் 25-07-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சாவகச்சேரி சங்கத்தானை நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மணிவாசகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகெளரி(லண்டன்), கெளரீசன்(லண்டன்) ஆகியோரின பாசமிகு தாயாரும்,
சிவநாதன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
மோகன்(லண்டன்), ஜதீசனா(லண்டன்), சயந்தன்(கனடா), சஞ்சய்(கனடா), ஹம்சத்வனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, தனபாக்கியம்(இலங்கை), சந்திரபூபதி(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை), ஞானசெளந்தரலிங்கம்(லண்டன்), குணமணி(லண்டன்), ஜெயமகாராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சே.க. நாகய்யா, சண்முகம்பிள்ளை, நாகலிங்கம், படியலிங்கம் ஆகியோரின் ஆசை மருமகளும்,
தபினா(லண்டன்), கரிஷ்மா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரு. திருமதி. குலவீரசிங்கம்(லண்டன்), திரு. திருமதி, எஸ். என். செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
வாலாம்பிகை படியலிங்கம், தில்லையம்மா பொன்னம்பலம், விசாலாட்சி தியாகராஜா, விசுவலிங்கம் சிவக்கொழுந்து ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
“I am truly sorry to hear of the loss of your mother. Please accept our condolences and may our prayers help comfort you.”