Clicky

பிறப்பு 26 OCT 1936
இறப்பு 09 JUL 2025
திருமதி தையலம்மா தாமோதரன்
வயது 88
திருமதி தையலம்மா தாமோதரன் 1936 - 2025 கோப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Paddy and family 14 JUL 2025 United Kingdom

மூப்பு என்பதை தவிர  உங்களை இந்த பூவுலகில் இருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்ல கடவுளுக்கு வேறு ஒரு காரணம் இல்லை.  அன்புக்கும், பண்பிற்கும் ஒரு உருவம் வேண்டும் என்றால் நீங்கள் தான். தன்னலம் இல்லாத ஒரு ஜீவன். பாரபட்சம் பார்க்காமல் விருந்தோம்பல் செய்த அக்ஷய பாத்திரம். அந்நிய நாட்டில், எங்களை அன்பால் அரவணைத்த அன்னை.  நீங்கள் விட்டுச் சென்ற புண்ணியத்தில் எங்கள் தலைமுறைகள் வாழும். பெயருக்கு ஏற்ப உறவுகளைத் தைத்து, அரவணைத்துச் சென்ற நீங்கள், விண்ணுலக தேவதையாக, நாங்கள் காணும் நட்சத்திரமாக, எங்களை வழி நடத்துவீர்கள் என நம்பிக்கை கொள்கிறோம். உங்கள் ஆத்மா அமைதி அடைய இறைவனை வேண்டுகிறேன். Paddy குடும்பத்தினர்.