அம்மம்மா
உறங்கும் எங்கள் உண்மை தெய்வம்
ஊர் அறிந்த உதவி தெய்வம்
வாசல் மிதித்து உண்ணாதர் எவருமில்லை
உனக்கு வாய்கரிசி போட மனமும்இல்லை
மகளுடன் மாறா அன்பு மரணம்வரை
பேரன்களுடன் பற்று பாசம் இதயம் நிற்கும் வரை
பூட்ட பிள்ளைகள் அன்பு உன் உடலுள்ள வரை
உன் கடைசி புன்னகை என் உயிர் இருக்கும்வரை
ஒற்றை பிள்ளை பெத்தாய் உனக்குமட்டும்
ஊரேல்லாம் உனது பிள்ளைகள் இறக்க மட்டும்
உனக்கா ஒன்றுமில்லை வாழ்கை முடிய மட்டும்
விட்டு சென்றாய் எம் கண்ணீர் விண்ணை முட்டும்
காலத்தின் அழைப்பில் நீ சென்றாய்
கடைசி வரை எம்மனதில் நீயிருப்பாய்
கண்கலங்கி கண்ணீர் சொரிய நீ கவலைபடுவாய்
நினைவிலே நிழல்களாக நீ என்றும் வாழ்வாய்
மீண்டும் நீ பிறந்து எங்களை வாழ வைப்பாய்
Agash