10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி நவநீதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
பண்பின் பேரொளியாய்
பாசத்தில் பன்மடங்காய்
நேசத்தின் திருவுருவாய்
உற்றார்க்கு உறுதுணையாய்
ஊரார்க்கு பேதமற்ற பெருங்கருணையாய்
உதவியென்று வந்தவர்க்கு
உதவிடும் கோ மகனாய்
வாழ்வில் தியாகங்கள் பல செய்து
வாழ்வனைத்தும் எமக்காக வாஞ்சையோடு வளர்த்து
நல்ல வாழ்வினையும் எமக்களித்து
நாம் வாழும்
காலமனைத்தும்
தம் சிந்தை நினைவிருக்க
எம்மை ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டுச் சென்றீரோ!
எம் தாயுமானவரின் ஆத்மா
சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்