யாழ். சாவகச்சேரி நுணாவில் சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தபோதினி கெளறிராம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாய் பண்பின் இருப்பிடமாய்
எம்முடன் வாழ்ந்த உம் பிரிவு
ஆண்டொன்றைக் கடந்து
எம்மைப் பிரிந்து செல்கின்றதே
உம்மையே நினைந்துருகி
வாழ்கின்றோம் என்றுமே
அன்பின் பிணைப்பினால்
உம்மை கண்டு கரம் பற்றினேன்
சிறு துளியும் பிசகாமல்
வளர்பிறையாய் எனை அரவணைத்தீர்
பண்பின் சிகரமாய் வாழ்ந்து எனக்கு தந்திட்டீர்
மும் மகனால் நீர் காட்டிய வழியில்
சிறப்புரவே வாழ்கின்றனர்
ஈரேழு ஜென்மங்கள் கடந்தாலும்
உன் நினைவுகள்
எம்மை விட்டு அகலாது நினைத்து நிற்கும்
உமது ஆத்மா சாந்தி பெற வாழ்த்துகின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் பாசமுடன் கணவர் கௌறிராம் கோடீஸ்வரன்
பிள்ளைகள் லோகீஷன், நிதிஷன், தனுசன் மற்றும்
அன்பு உறவினர்கள்