பிரித்தானியா லண்டன் Kingston ஐப் பிறப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருன் ராம்ஜிவோன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் தான் 31 ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை..!
பாசம் என்னும் பிணைப்பிலே
இணைந்திருந்த
எம்மைவிட்டு
எங்குதான் சென்றாயோ
உன் சிரித்த முகமும் சிந்தனையான
பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
இல்லறம்
மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய்..?
காத்திருக்கின்றோம் விழிகளில் நீர்வடிய
வருவாயா எமைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று Sri Raja Rajeswary Amman Temple 4 Dell Ln, Stoneleigh, Epsom KT17 2NE, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் மதிய போசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Sri Raja Rajeswary Amman Temple
4 Dell Ln, Stoneleigh,
Epsom KT17 2NE,
United Kingdom