உள்ளம் உடையுதையா உன் உறவின் பிரிவு கேட்டு கண்ணீர் மருவியோடி எம் கருவிழிகள் கறுத்ததையா கள்ளம் கபடமற்ற உன் வெள்ளைச் சிரிப்பொலியை அள்ளித் தெளித்தெறிய இனி ஆருண்டு இவ்வுலகில் மிடுக்கான உடுப்போடு நீவீர் எடுப்பாக நடப்பீரே அடுக்கான மொழிபேசும் துடிப்பாற்றல் கொண்டவரே இடியோடு மழையோசை பட்டுத் தெறித்தெம்மில் பாய்வதுபோல் அடியோடு சாய்ந்து நீரும் மடிந்தோடிப் போனதென்ன குடும்பத்தின் சுமை சுமக்க கடும் பாடு நீ பட்டாய் சோதரிகள் குடும்பட்காய் சோதனை பல பெற்றாய் பதவி (இராணுவ) பறிபோயும் உதவி ஏதும் வேண்டிடாமல் சாதனைகள் செய்து நீயும் வேதனைகள் கண்டதென்ன பயணித்த பாதைகளால் புகழ் பூத்துப் பெருகினாலும் பயனற்ற புகழினாலே பெற்றீர் இல்லை பேரின்பம் பரன் பாதம் வந்தேனென்று சரணடைந்தீர் சத்தியத்தில் கரம் பற்றும் கர்த்தர்யேசு- உனை பரம் ஏற்ற வழிசமைத்தார். R. Mathialagan Canada
Deepest Sympathies A great friend and a great football player who made us proud to be part of Jaffna Central College (JCC), Jaffna, Sri Lanka. Our heartfelt condolences to his family and to his...