Clicky

பிறப்பு 20 MAY 1934
இறப்பு 29 JUN 2026
திரு சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ்
முன்னைநாள் இ.போ.ச. அத்தியட்சகர்-முல்லைத்தீவு
வயது 92
திரு சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ் 1934 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அமிர்தநாதர் குடும்பம். 31 JUL 2026 United Kingdom

Bernard குஞ்சையா நினைவாக ... முப்பத்தொன்றிற்கும் முதல் நாள், பின்னிரவு வேளையில், மூச்சுக் காற்றை இறுதியாய் முடித்துக் கொண்டாய், முடிவென்றாக ... இலங்கைப் போக்கு வரத்துச் சபையில் இணைந்தாயே வேலைக்கு முன்பே 'கிளாக்கர் ஐயா' என்றே, பின்பு 'இ.போ.ச' முல்லைத்தீவு அத்தியட்சகர், அபார உழைப்பு ... முயற்சியே, விடா முயற்சியாக ... தோன்றிய தடைகள் பல தோல்விகள் தாண்டியே தேறியே காட்டினாய், உதாரணமாய் ... இலங்கைப் போக்குவரத்துச் சபை (இ.போ.ச) 'இதில் போவது சங்கடம்' (இ.போ.ச) என்றிருக்க இயன்றவரை முயன்றாயே, 'இதில் போகலாம் சரிதான்' (இ.போ.ச) என்றாக ... கல்வியே கருந்தனம், பிள்ளைகள் கல்விக்காய், காலமெலாம் உழைத்தாயே, காசொரு தடொயாகதென ... சேர்த்து வைத்த செல்வங்கள், சேர்ந்து வரா செல்கையிலே, காட்டித் தந்த வழிகள் நிற்கும், நன்றி அப்பா, நன்றி .... போதும் இனி இளைப்பாறு, மீண்டும் ஒரு வேளை சந்திக்கும் வரை ... நன்றி வணக்கம் அமிர்தநாதர் குடும்பம் ஆடி 2026.