யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு திருச்சி ஸ்ரீரங்கத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுதாஸ்வரன் கதிரமலை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரமலை சரவணை(J.P- செட்டித்தெரு M.T.M பாடசாலை) தவமணி(முன்னாள் ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருத்திகா(B.Com, தமிழ்நாடு) அவர்களின் அன்புக் கணவரும்,
வர்ணிகா(தவமணி- தமிழ்நாடு) அவர்களின் ஆசைத் தந்தையும்,
மதீஸ்வரி(B.SC, Waltham Forest Tamil School Assistant Teacher, UK), காலஞ்சென்றவர்களான கவீஸ்வரன்(சுவிஸ்), துஷாஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரன்(தீரன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆதவன்(பிரித்தானியா), சுஜானி(பிரித்தானியா), சுஜந்தி(பிரித்தானியா) ஆகியோரின் தாய் மாமனாரும்,
ஜீவிதா, தாட்சாயினி, ஆசகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவனடியார் இராஜதுரை(இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.