
யாழ். சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுசீலாதேவி தேவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அம்மாவே
எம்மை
விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழி நடத்திய அந்த
நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் அழியாது அம்மா
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப் படிகளில் அம்மா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்
பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த
ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே
எங்கள் குடும்பத்தின் குல விளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர்
மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி..