யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். பூண்டுலோயா, கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட Dr. சூசைப்பிரகாசம் சவேரியன் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிரகாசம், அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லீனப்பு, ஜேற்றூட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொலின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிவா, நிரஞ்சனி, நந்தினி, விஜிதா, சுஜிதா, றஜிதா, தேவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மார்ட்டின், மனுவல்பிள்ளை மற்றும் சிறில் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியதாஸ், யோகராணி, ஜெயராஜா(ஜேசுதாசன்), காலஞ்சென்ற றொபினா, அருள்தாசன், மெரினா, லூத்தம்மா, காலஞ்சென்றவர்களான கந்தவனம், அனி வேர்ஜினியா, அருளம்மா, மற்றும் வசந்தி, யோகேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
ஜோ, பிரியாராஜன்(சத்தியதாஸ்), அமல்ராஜ், கமலதாசன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெரில், ஜிசெல், தனிஷா, டிஷானி, எலின், எல்ரிக், ஆரன், டருன், இமையாள், ஆதிரை ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய தொற்றுநோய் காரணமாக அனைத்து நிகழ்வுகளும் இணையத்தளத்தின் ஊடாக ஒளிபரப்பப்படும்.
Viewing : Tuesday 5.00pm - 7.00pm and Wednesday 7.30-9.00am
Live stream: https://video.ibm.com/channel/...
Church Service and Burial :
Join Zoom Meeting https://us04web.zoom.us/j/8023...
அன்பான பேச்சு, கருணைமிக்க அரவணைப்பு, முகத்தில் மாறாத புன்சிரிப்பு இவையெல்லாம் சொந்தமாய்க் கொண்ட நற் தந்தையாய் வாழ்ந்து இன்று இறையடி சேர்ந்திட்ட அங்கிளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்....