யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடி கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியதாசன் பொன்னுத்துரை அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னுத்துரை(SEP) பவளம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் பர்வதலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவீற்ரா, சூர்யா, மேனுயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நீல்ஸ் சென்டற்ஸ்கி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
மனோரதி(யாழ்ப்பாணம்), ஜெயரதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகுமாரன்(யாழ்ப்பாணம்), தட்சணாமூர்த்தி(சுவிஸ்), மஞ்சுளா(யாழ்ப்பாணம்), மனோகரன்(பிரான்ஸ்), மனோகரி(வசந்தி- கொலன்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியா மயூறா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.