திதி: 02-10-2023
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுரேகுமார் சமிதீஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தான்
ஓடிப் போனாலும் அழகு ஓவியமே
எமது உயிர் உள்ளவரை உனது
அன்பு முகம் எங்கள் விழிகளில் தான்
விண்மீன்கள் சூழ்ந்துவர
வானத்தில்
பவனிவரும்
வெள்ளி நிலாப் போன்றவளே!!!
உள்ளத்தால் உள்ளளவும்
கூடுதில்லை
உன்மரணம்
காலத்தால் அழியாத
உன் நினைவில்
கலந்து நிற்கின்றோம்
நாம்
கண்ணீர் மல்கி......
ஓராண்டு உருண்டோடியதோ
உங்களை நாமிழந்து!
ஆலமரமாய் அடித்தளம் இட்டு
விழுதுகள் எங்களை
வெற்றிகரமாய் வளர்த்தீர்!
இறைவன் காலடியில் என்றென்றும்
வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாது
நிழலாக நாமிருப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!