
யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இராஜசேகரம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நொடிப்பொழுதில்
எமை நோகவிட்டு
சென்றுவிட்டீர்கள்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம்!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில்
உங்களை
கண்டிட முடியாதோ....
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியின் ஆத்மசாந்தி பிரார்தனை 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று வளலாயில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94770155347