யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா அவர்களின் 03ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-04-2023
உன்னை இழந்து ஆண்டுகள் பல கடந்தாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!
நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய்!
நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...
எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அம்மாவின் மூன்றாம் ஆண்டு மோட்சபூசையும் அதனைத்தொடர்ந்து அன்னதானமும் 22-04-2023 சனிக்கிழமை அன்று Sri Kamadchi Amman Aalayam 36 Avenue de la Division Leclerc, 93000 Bobigny எனும் முகவரியில் நடைபெற இருக்கிறது, அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.