
யாழ். நாவற்குழி கைதடி கலையாபரணன் கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பு கந்தையா அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பு பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரி, கமலாதேவி, கமலநாதன், தவமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முத்தாச்சி, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரகத்தி, தேவி, மற்றும் சின்னத்தங்கம், கந்தசாமி, அரியபுத்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐங்கரன், கந்தசாமி, லலிதாம்பிகை, விஜயகுமார், ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செந்தூரன், சுதர்சன்-சிந்து, செந்தூர்வேல், வினோத், சிந்துஜா-சத்தியராஜ், மிதுனன்-பிரவீனா, தனுசன்-வைசாலி, விஜிந், தர்மிலா ஆகியோரின் பேரனும்,
சஹானா, சாரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் காந்தாளம்பிட்டி(கொல்லங்கிராய்) இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.