
யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தம்பசிட்டியைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பர் வடிவேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு
கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே!
நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!
உங்கள் நினைவுடன் வாழும் மனைவி பாக்கியதேவி(இலங்கை),
மகன் துஷ்யந்தன் றோகினி குடும்பம்(ஐக்கிய அமெரிக்கா),
மகள் பத்மினி ரவிசந்திரன் குடும்பம்(பிரான்ஸ்),
மகன் விஜியந்தன் விஜித்தியா குடும்பம்(பிரான்ஸ்),
மகள் கௌரி குபேதரத்தினம் குடும்பம்(கனடா),
மகள் தர்சினி பற்றிக் டிறஞ்சன் குடும்பம்(இலங்கை),
மகன் புவியந்தன் தர்ஷா குடும்பம்(பிரான்ஸ்),
மகள் கஜேந்தினி ராஜாராம் குடும்பம்(ஜேர்மனி) மற்றும்
சகோதர சகோதரிகள், மருமக்கள், உறவினர்கள்
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கிரிமலையில் நடைபெற்று பின்னர் அவரது இல்லத்தில் மதிய போசனம் நடைபெறும்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details