1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பையா துரைராசா
(அங்கிள்)
முன்னாள் கட்டிட திணைக்கள உத்தியோகத்தர்
வயது 94
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா வெஸ்ரன், Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா துரைராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி