Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 FEB 1940
இறப்பு 02 APR 2023
அமரர் சுப்பையா சிவசுப்பிரமணியம் (சின்னத்தம்பி)
முன்னாள் ஜானகி டெக்டைல்ஸ் உரிமையாளார் , Textile Technologist
வயது 83
அமரர் சுப்பையா சிவசுப்பிரமணியம் 1940 - 2023 அநுராதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை மத்தி கோவிற்கடவையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:21/03/2024.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன். 

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்