
யாழ். கரவெட்டி பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பையா கணேசபூபன் அவர்களின் 100ம் ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி.
100வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் உங்கள் நினைவில் உங்கள்
பிள்ளைகள், மருமக்கள்,
சகோதர,
சகோதரிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள்
ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும்
அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும்
உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ
இவ்வுலகில் அப்பா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.....