யாழ். சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராமையா அவர்கள் 17-06-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இலட்சுமணன், முல்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,
அமுதா, விஜயா, சிவகுமார், புனிதா, நந்தகுமார், கலா, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தையா அவர்களின் அன்புச் சகோதரரும், தேவானந்தன், துரைரட்ணம், மாலினி, முருகானந்தன், கலைவாணி, ஶ்ரீதரன், வசந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-06-2015 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்திலும், 20-06-2015 சனிக்கிழமை முதல் 21-06-2015 ஞாயிற்றுக்கிழமை வரை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.