யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டரங்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரம் செல்வரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.