கொழும்பு தெமட்டகொடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அப்பா, அப்பா என்று ஒலிக்கும் உதடுகல்
இன்றும் ஒயவில்லை எங்கள் மனதில்!
திங்கள் பல கடந்து போனாலும் என்றும்
எங்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து நிற்கின்றீர்
இன்றும் எங்கள் எல்லோரையும் ஏங்க வைத்து
சென்று விட்டீரோ தெய்வமே! இதனால்
உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
புலம்புகின்றன் உங்கள் நினைவால்
நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று தானோ நினைத்து இருக்க
இன்றும் கல்லறறையாக மாறிவிட்டீகள்
நீங்கள் எங்களை அன்பாக அரவணைத்த விதம் இன்றும்
எங்கள் கண்முன்னே ஒலிக்கின்றது அப்பா!
31 நாள் ஓடி விட்டன இன்று, என்றும்
எத்தனை ஆண்டுகள் ஒடி மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் மனதில் ஒயா இடம் பிடித்திருக்க
அப்பா!! அப்பா!! அப்பா ஓம் சாந்தி!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.