
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஏழாலை சூராவத்தை, அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் செல்லம்மா அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(பத்திநாதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்றூ(கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்), மரீனா(பிரான்ஸ்), மடோனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
வலன்ரீனா(கிராமசேவகர் அளவெட்டி வடக்கு), லக்ஸ்மன்(பிரான்ஸ்), கஜரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேயுஜன், பிள்ஸ்ஜா, பிளஸ்சோ, பஷிலியா, அமெலியா, அனோலிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான அழகரெத்தினம், பூபாலசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் ஞானரெத்தினம், யோகரெத்தினம், தங்கரெத்தினம், மரியலொறற் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:15 மணியளவில் புனித சூசையப்பர் கோவிலடி அளவெட்டி எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் சூராவத்தை புனித திரேசம்மா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஏழாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Auntie Regina. . I am honored and blessed to have known your mother. She was truly a blessing in our lives and we will miss her. Our condolences. -Sivaruban Family