யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சரவணமுத்து அவர்கள் 04-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகர், துவாரகா, சுயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜேசி, முரளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகலிங்கம், தையல்நாயகி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஷ்பலீலவதி, காலஞ்சென்ற முத்துலிங்கம், சரஸ்வதி, சந்திரலட்சுமி, யமுனன், யோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமசுந்தரம்(விசுவப்பா), பேரம்பலம்,லிங்கேஸ்வரி, சசிகலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
அயன், அனுஜ், எலேனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாமாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.