யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பிரதீஸ் அவர்களின் 31 ஆம் நாள் நினைவுகூர்தலும் நன்றி நவில்தலும்.
அன்னார் மறைந்த செய்தி அறிந்து எம் தோளோடு தோள்
நின்று கையோடு கைகோர்த்து எங்கள் இதயச் சுமையைத்
தாங்கிப்பிடித்த உதிர உறவுகளுக்கும்
உரிமையோடு நின்று உடலாலும் உள்ளத்தாலும் பெரும்
உழைப்பைத் தந்து அன்னாரின் அஞ்சலி நிகழ்வைச் சீராய்
செய்து முடிக்க உயிராய் உடனிருந்த நண்பர்களுக்கும்
பேச்சிலும் எழுத்திலும் நேரிலும் ஆறுதலாய் எம்மைத்
தேற்றிய உற்றார்களுக்கும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக
பிரார்த்தனை செய்கின்ற உயர்ந்த உள்ளங்களுக்கும்
எங்கள் நெஞ்சார்த்த நன்றி
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவிப்பதோடு, 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 03.00 மணி வரை ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசனம் நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
90, Rue Emile Zola,
93120 LA Courneuve,
France