யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், சுவிஸ், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் இராமநாதி அவர்களின் நன்றி நவிலல்.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே
அன்பையும் பண்பயும் அள்ளி தந்து
அல்லும் பகலுமாய் அயராது பாடுபட்டு
அன்று முதல் இன்று வரை நாம் வாழ
நல்வழி காட்டி எங்கு சென்றீர்கள் இப்போது
எமையெல்லாம் தவிக்க விட்டு
மாதம் ஒன்று ஆனதுவே
மனது இன்னும் ஏற்கவில்லை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பாவைப்போல் எதுவுமில்லை
நித்தம் உங்கள் நினைவால்
சித்தம் கல்ங்கி நிற்க்கும் நாம்
விழிநீர் வழிய உங்கள்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் அந்தியேட்டி கிரியை 11-04-2026 சனிக்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.