

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் இராஜகுமார் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
சீர் இணுவை தந்த சீராளன்
சிரித்த முகத்தழகன் பண்பாளன்
பாசமுடன் பழகு வதில் பேராளன் நீ
பாதி வழி நடந்து வந்து- உன்
பாதம் வலிக்கும் என்று
மீதி வழி வராது விதிவிட்ட வழியென்று
விண்ணோக்கி சென்றதென்ன
படுத்துறங்கி காலை துயில் எழுப்ப
பசுமையாய் பழுத்த மரம் பாறி வீழ்ந்தது
போல்நீள் துயில் கொண்டனையோ
ஜேர்மன் இணுவையூர் ஒன்றியத்தின்
ஆஸ்தான பாடகன் நீ
ஓடி வந்து மேடை ஏறிவந்து
தெறித்த உன் நாதக்குரல்
காற்றில் கலந்து எம் காதுகளில்
துள்ளி துள்ளி கலகலக்க
உனையீன்ற மண் மறந்து
உன்னவள் நீ பெற்றவர்
உற்றம் சுற்றம் உறவுகள் மறந்து
காலக்கணீப்பீட்டில் கண் உறக்கம் கொண்டாயோ
கலங்குகின்றோம் உன் பிரிவால்
கண்ணீரால் கரைந்து உன் ஆத்ம
சாந்திக்காய் கரம் கூப்புகின்றோம்..
ஜேர்மனி இணுவையூர் ஒன்றியம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.