சொந்த ஊரில் வந்தால் தங்க இடமில்லை,பிறந்து வளர்ந்த "லிங்க வாசா"வீட்டிலும் தந்தையின் "அனைத்துப்பிள்ளைகள் குடும்பமும் வந்து தங்கும் வீடாக இவ்வீடு இருக்கவேண்டும் " ஆசையை மீறி அவர் மனைவி போட்ட கையெழுத்தால் தங்க விடவில்லை என்று சொந்தவீடு கட்டி தங்க ஆசைப்பட்ட அண்ணன் வீடுகட்டும் கனவை நனவாக்கிய பின் அங்கு புதுமனை புகும் விழா செய்து தங்க முடியாதபடி இயமன் அழைத்துக்கொண்டாயே!இது நியாயமா?தர்மமா? தூக்கி வளர்த்த சித்தி இறப்பறிந்தும் வீடு பார்க்க ஊருக்கு வந்த போது துக்கம் விசாரிக்காமல் சென்றதால் இயமனுக்கு கோபமானதோ! கடவுள் நீதி எனக்கு புரிவதில்லை,நல்லவரை கொடுமை செய்கிறான்,நட்டாற்றில் விடுகிறான்! அநீதியை தட்டிக்கேட்காதோரைக்கூட அருமையாக வாழ வைக்கின்றான்! என் தந்தை இறந்தது 65வயதில்!அண்ணன் கண்ணன் (தயாளன்) 55 வயதில்! அண்ணன் மகனுக்கோ நான்கு மட்டுமே! இப்போ நீங்கள் ! "எட்டு எட்டா மனிதவாழ்வை பிரிச்சுக்கோ முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல!. இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல! மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல!, நான்காம் எட்டில் பெறாதது குழந்தயுமல்ல! ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல! ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல! ஏழாம் எட்டில் எட்டில் காணாதது ஓய்வுமல்ல! எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல! ஆக இரத்தினத்தின் வம்சம் காக்க பிள்ளை தந்து நிம்மதி பெற்ற உங்க ஆத்மா மறு பிறப்பற்ற பெருவாழ்வைப் பெறட்டும்!
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்