1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:09-09-2025
யாழ். சின்னாலடி, அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Benken St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுமதி சிவகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உறவென்ற விருட்சம் ஒன்று உறங்கியது கண்டோம் அம்மா!
பிரிவென்ற பெருந்துயரம் வாட்டுது எம் உளத்தை!
துன்பம் வரும் வேளை எல்லாம் தூணாக நின்றீர்!
துவண்டு நாம் வீழாமல் காத்திருந்தீர்!
வாழ்வினில் எட்டாது வாழ வைத்த தெய்வமே!
வாடி மனம் தவிக்கின்றதே வாழ்ந்து நீங்கள் முடிந்ததனால்!
பாரினில் உமக்கென ஈடான உறவு நாம் பார்ப்பது இனி எப்போ?
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!
நீண்ட பெருவெளியில்
நிற்கதியாய் நிற்பதுபோல்
மீண்டும் ஒரு பிறப்பாய்
காண்பதற்கு ஏங்குகிறோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்