Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1946
இறப்பு 04 APR 2020
அமரர் சுலோஜனா விஜயநாதன்
Retired Teacher- கோண்டாவில் யாழ்ப்பாணம்
வயது 73
அமரர் சுலோஜனா விஜயநாதன் 1946 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுலோஜனா விஜயநாதன் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கோண்டாவிலைச் சேர்ந்த அப்புத்துரை ரத்தினம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், பிரம்படி நாகநாதன் மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனார்தனி, லலிந்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Jason Alvares அவர்களின் அன்பு மாமியாரும்,

மரகதம், திருவோணம், லீலாவதி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரமூர்த்தி, வினாயகமூர்த்தி, சிறினீவாசன், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகாநாதன் - வானதி, விஜயமலர்- செல்வராசா, செல்வநாதன்- ராசாத்தி, யோகநாதன்- நந்தினி, மாலினி- வியஜேந்திரன், மனோகரன்- சுவர்ணா ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

வர்சி, சாம்பவி, இந்து, கௌரங்கன், சஞ்ஜெய், விஜேய், திவ்வியா, துளசிதா, கஜானி, கஜப்பிரியா, கஜீனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சிறீராம், ஜெயராம், ரமணி, குமுதினி, நிதர்சன், தர்மியா, லக்குமியா ஆகியோரின் அன்பு மாமியும்,

கிருபா, ரேணுகா, கீதா, பிரபா, மயூரன், ஆருரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ஆசான், ரிசான், ஆரணன், யதுரன், அகரன், நிலானி, நிசாந்தி, அஜந்தா, நிஜந்தா, நிருஜா, கம்சாயினி, விதுரன், சர்மிலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு அரச அதிகாரிகள் ஆலோசனைக்கேற்ப நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்