Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 02 JUN 1940
விண்ணில் 08 JAN 2024
அமரர் சுகிர்தராணி அன்ரனி ஜெயராஜா பொடிசிங்கோ
வயது 83
அமரர் சுகிர்தராணி அன்ரனி ஜெயராஜா பொடிசிங்கோ 1940 - 2024 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தராணி அன்ரனி ஜெயராஜா பொடிசிங்கோ அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொடிசிங்கோ, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனி ஜெயராஜா பொடிசிங்கோ அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற அன்ரனி ஜேகப் ஜெயசுதாகர், அன்ரனி பிரான்சிஸ் ஜெயசுஜிகர்(Switzerland), அன்ரனி ஸ்டெல்லா ஜெயசுவன்னியா(Project Coordinator, Jaffna Social Action Centre) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயானி பிரான்சிஸ் ஜெயசுஜிகர்(Switzerland) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தவராணி செல்வநாயகம், தவராசா, புஸ்பராணி வேலுப்பிள்ளை, சௌந்தரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செபமலர் கனகநாயகம், தர்மராஜா பொடிசிங்கோ, லீலாவதி தேவமனோகரன் மற்றும் அருட்சகோதரி செல்வராணி அ.க ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கென்ஷியா, யானிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-01-2024 புதன்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தாண்டவன்வெளி தூய காணிக்கை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கள்ளியங்காடு உயிர்ப்பின் உறைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்டெல்லா ஜெயசுவன்னியா - மகள்
ஜெயசுஜிகர் - மகன்