Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1945
இறப்பு 07 OCT 2020
அமரர் சுகிர்தராணி ஜெயரட்ணம்
பேராதனை பல்கலைகழக பட்டதாரி, இளைப்பாறிய ஆசிரியை- மல்லாகம் மகா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 75
அமரர் சுகிர்தராணி ஜெயரட்ணம் 1945 - 2020 சுன்னாகம் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தராணி ஜெயரட்ணம் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செனகரட்ணம் மல்லிகை புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லக்ஷ்மணன்(லக்கி- கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

அனுஷி(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

லலிதமனோகரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தசோதி, கோசலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: லக்ஷ்மணன்(லக்கி- மகன்)