
புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுகண்யா சிவஞானம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரே எங்கள் உயிர் ஓவியமே
அன்றெல்லாம் எம்முடன் நீ இருந்தாய்
ஆண்டுகளோ ஆடிப்பாடி மெல்ல நகரும்
இன்றோ எம்முடன் நீ இல்லை
ஆண்டுகளோ பறந்தோடி விரைந்து மறைகிறது
நாளேடு நீ மறைந்து நான்காண்டு என்கிறது
ஐயகோ நம்பவே முடியுதில்லை
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஈன்றவள் பரிதவித்தாள்
சுமந்தவன் தவிக்கின்றான்
காலனவன் கொடியவனே
அறிந்திலனோ எங்கள் நிலை
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் பிரிவால்
மகளே என் உயிராய் உடலாய் உதிரமாய்
என்னுள்ளே நீ இருக்கும்போது பிரிவென்பதேது
உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
Her presence will never be forgotten. Her kindness and joy live on in our memories. We will forever miss you Sughi, remembered always with love.